Kogilavani / 2021 மே 13 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, கொட்டகலை நகரில் விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
வியாபார நிலையங்களில், “கொரோனா இன்னும் ஒழியவில்லை, முகக்கவசம் முறையாக அணிய வேண்டும், சமூக இடைவெளி பேண வேண்டும்” போன்ற வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதன்போது வியாபார நிலையங்களில், முறையாக முகக்கவசம் அணியாது இருந்தவர்கள், சமூக இடைவெளியைப் பேணாது இருந்தவர்கள், சுகாதார பொறிமுறைக்கு அமைவாக தொற்று நீக்கி மற்றும் பதிவேடுகள் பேணப்படாத வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
சுகாதார பொறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பொலிஸார் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.
இதேவேளை பொதுப்போக்குவரத்துகளில், சமூக இடைவெளி இல்லாது பயணித்தவர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் வாகனங்களிலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.


8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago