Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவும் அதன் அச்சுறுத்தல்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கவும், கொடக்கவெல பிரதேசத்தில், பிரதேச அரச நிறுவனங்கள் பல ஒன்றிணைந்து, பாதுகாப்பு செயலணியை உருவாக்கியுள்ளன.
கொடக்கவெல பிரதேசசபை, கொடக்கவெல பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், பொது சுகாதார காரியாலயம் உட்பட பிரதேசத்திலுள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் இணைந்து, மேற்படிச் செயலணியை உருவாக்கியுள்ளன.
கொடக்கவெல பிரதேச செயலகப் பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கொடக்கவெல பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த பண்டார தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கிணங்க சகல அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல் வழங்கவும், அரச நிறுவனங்களின் நுழைவாயில்களில் கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டு, உள்நுழையும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நோய் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு சிகிச்சை பெற உதவுதல், நோய் குறித்த அலட்சியத் தன்மையுடன் மறைந்து வாழ முயற்சிக்கும் நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் தற்போது தமது அதிகார பிரதேசத்தில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago