ஆ.ரமேஸ் / 2020 மார்ச் 25 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலக அதிசய மண்டபத்தில், நேற்று (24) நடைபெற்றது.
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றிருந்து.
நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் புகையிரத இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், கொட்டகலை, தலவாக்கலை, நோர்வூட், மஸ்கெலியா, அக்கரப்பத்தனை, வலப்பனை, அம்பகமுவ, கொத்மலை ஆகிய பிரதேச சபையின் தலைவர்கள், நுவரெலியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிள், நுவரெலிய மாவட்ட சுகாதார திணைக்கள செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்று நீக்குவதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் தோட்ட மக்கள், நகர்ப்புற வாழ் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுக் கொடுப்பது பற்றியும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் போது, கொரோனா தொற்று நீக்கியை சகல இடங்களுக்கும் தெளிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago