2026 மே 07, வியாழக்கிழமை

கொரோனா பாதுகாப்பு தொடர்பில் விசேட கூட்டம்

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

கேகாலை மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையத்தின் விசேட கூட்டம், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், கேகாலை மாவட்டச் செயலகத்தில், நேற்று (30) நடைபெற்றது.

இதன்போது கேகாலை மாவட்டத்தை, கொரோனா வைரஸ் பரவிலிருந்து பாதுகாப்பதுத் தொடர்பில், விசேடமாக ஆராயப்பட்டது.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதுத் தொடர்பில், மேற்படி நிலையத்தின் அதிகாரிகள் 

ஏற்கெனவே எடுத்த தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் இடர்பாடான நிலைமைகள், அதற்கானத் தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களை வழங்குவதுத் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும் கேகாலை, மாவனெல்ல ஆகிய பகுதிகளில் பணியாற்றும் வைத்தியர்களுக்கு, கொரோனா பாதுகாப்பு உடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

இந்தக் கூட்டத்தில், கேகாலை மாவட்டச் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, கேகாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார் விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .