Editorial / 2020 மே 05 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ், உமாமகேஸ்வரி
நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலைக் குற்றச்சாட்டு வழக்கொன்றின் சந்தேக நபரான இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர், நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து அவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அத்துடன் இக்கொலை குற்றச்சாட்டுத் தொடர்பில், பிரதேச ச பை உறுப்பினரிடம் வாக்கு மூலம் பெறுமாறும் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
இரத்தினபுரி, கிலீமலை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரைக் கொலை செய்து, இப்பகுதி களுவரவெவ காட்டுப் பகுதியில் புதைத்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago