ஆ.ரமேஸ் / 2020 மே 05 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக, தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தால் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல், மேல் மாகாணத்தில் நிர்க்கதியாகியிருந்தவர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில், இன்று (05), 700 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை அனுப்பும் பணிகளை, ஜனாதிபதி செயலணி முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம், இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த வகையில், தங்களது ஊர்களுக்குச் செல்லவேண்டும் என, இவர்கள் கடந்த 13ஆம் திகதி, பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இவ்வாறு பதிவு செய்யப்பட்ட, மலையகம் உள்ளிட்ட வழக்கு, கிழக்கு, மற்றையப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த 21 நாள்களாக, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தளுக்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின், இவர்களுக்கு கொரோனா தொற்றில்லை என, வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்ட பின், அவர்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள், ஜனாதிபதியின் செயலணி செயலாளர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை (03) அன்று, நாடளாவிய ரீதியில் 321 பேரில், 198 பேர், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பெரும்பாலானோர் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என, இந் நடவடிக்கைகளின் கண்காணிப்பாளர் எம்.முரளிதரன் தெரிவித்தார்.
அத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லவென பதிவு செய்யப்பட்டு, 21 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு நோய் தொற்று அற்ற மேலும் 700 பேர், நேற்று காலை, நுகேகொட பகுதியிலிருந்து இலவச பஸ்கள் மூலம் தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தொழில் நிமித்தம், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, நுகேகொடை பிரதேசங்களுக்கு வருகை தந்தவர்களே, இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என, கண்காணிப்பாளர் எம்.முரளிதரன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சொந்த இடங்களுக்கு திரும்பி செல்லமுடியாது கொழும்பு கோட்டை பகுதியில் அநாதரவாக இருந்த 21 பேரையும் தமது சொந்த ஊர்களுக்கு கட்டம் கட்டமாக ஜனாதிபதி செயலணி அனுப்பி வைத்ததாகவும் இதில் இறுதியாக இருந்த 12 பேரையும், நேற்று முன்தினம் (04) தனி வாகத்தின் அனுப்பி வைத்ததாகவும் எம்.முரளிதரன் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago