Freelancer / 2024 ஜூலை 08 , பி.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
1,700 ரூபாய் சம்பள உயர்வு கோரி கொழும்பு - பம்பலப்பிட்டி நோக்கி படையெடுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை அங்கு நடத்தவுள்ளனர்.
இந்த போராட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பெருந்தோட்ட துறைமார் சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன் செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்துள்ளதாக காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இந்த போராட்டம் 1,700 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்ட துறைமார் சங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயத்தில் இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட கமிட்டிகள் என பலரும் கலந்து கொண்டு முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago