Editorial / 2023 நவம்பர் 07 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழை காரணமாக பத்கொடவில் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால், கொழும்பு - பதுளை பிரதான வீதி இன்று (7) மாலை நான்கு மணியளவில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மண்சரிவை அடுத்து வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டமையால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகன நெரிசலை குறைக்கும் செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மண் சரிவுகள் சேறும் சகதியுமாக ஓடுவதால், வீதியை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .