மொஹொமட் ஆஸிக் / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், ஒரு மணித்தியாலமேனும், ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்கத்தில் வைத்திருக்கப் போவதில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கண்டி மாவட்ட பொதுஜன பெரமுனவின், கண்டி மாவட்ட விவசாயிகளின் மாநாட்டில் கலந்துகொண்டு, நேற்று (31) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு, விவசாயத்தால் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டது என்றும் அந்த ஆட்சியின் போது, விவசாய பயிர்களுக்கு கூடிய விலை பெற்றுக்கொடுக்கப்பட்டமையால், பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தைக் கண்டது என்றும் கூறினார்.
தேர்தல் அதிகாரிகளின் கருத்தப்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது என்றும் அடுத்த நாளே, புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago