Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பசறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோணகல தோட்டம் 10ஆம் கட்டை கீழ்ப் பிரிவில் பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை, மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதையே, மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில், 70 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் வசித்து வருவதாகவும் கடந்த மாதம் நிலவிய சீரற்ற வானிலையின் போதே, கற்பாறைகள் சரிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பகுதியிலுள்ள 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டே, பாடசாலைக்குச் செல்லவேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago