Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 07 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். யோகா
கம்பளை- மேரிவலை கீழ் பிரிவில் உள்ள கோழிப் பண்ணையிலிருந்து கோழிகள் திருடப்பட்டுள்ளன.
இந்த பண்ணையிலிருந்து சுமார் 50 கோழிகள் திருட்டு போயுள்ளதாக பண்ணை உரிமையாளர் குறுந்துவத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். .
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட கோழிகள் அதே தோட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஒரு கிலோ கோழி இறைச்சி 1100- 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், சந்தேகநபர்கள் திருடிய கோழிகளை 800 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (6) கம்பளை நீதிமன்றத்தின் ஆஜர் செய்தபோது, அவரை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .