Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா, வனராஜா தோட்ட மணிக்கவத்தை இலக்கம் 1 பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு, தொழிலாளர்கள் இளைஞர்களின் கோரிக்கைக்கு இணங்க, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், நிறப்பூச்சுகள் வழங்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா பிரதேச அமைப்பாளர் சுப்பிரமணியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆய்வாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் கலந்துகொண்டதுடன். தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் உறுப்பினர் திருமதி ராமேஸ்வரி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களான ஜஸ்டின் ,கேசவன், பாலசுந்தரம், மாவட்ட தலைவர் செல்வராஜ் உட்பட தோட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026