Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
வட்டவளை - ஆக்ரோயா தோட்டத்தில், கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட கைகலப்பில், மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி கோவிலில், செவ்வாய்க்கிழமை (27) தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளதுடன், அதன் பின்னர் மஞ்சள் நீர்த் திருவிழா நடைபெற்றுள்ளது.
இதன்போது, இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது, கைகலப்பாக மாறியதாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago