Sudharshini / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.கோகுலன், எஸ்.செல்வராஜ்
ஹப்புதளை - வெலிமடை பிரதான வீதியின் 4ஆம் கட்டையை அண்மித்த அரச வனப்பகுதியிலிருந்து பணப்பெட்டியுடன் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பணமும் ஆயுதங்கள் சிலவும் நேற்று (01) கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற இளைஞனொருவர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்துக்கு சென்று பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதேவளை, வெலிமடை, கெப்பெடிபொல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றினுள் திங்கட்கிழமை (31) அதிகாலை 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago