Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 25 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ்
கூட்டொப்பந்த விவகாரத்தை நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1,000 ரூபாயை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் மாத்தளை மாவட்ட செயலாளர் சே.மோகன்ராஜ் கோரியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்க, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மாத்தளை நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக, நேற்;று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், கமினியூஸ்ட் தொழிலாளர் சங்கம், முன்லார், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகள் பங்குபற்றியிருந்தன.
இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்;,
'நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியினாரால் தலவாக்கலையில் நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தலில் வெற்றிபெற்றவுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால், இதுவரை அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோட்டத் தொழிலாளர்கள் கோசம் எழுப்பியதுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆறுமுகன் தொண்;டமான் ஆகியோரது பொய்யான வாக்குறுதிகளுக்கும் கண்டனம் தெரிவித்தனர்' என்றார்.
தோட்டத் தொழிலாளர் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் பாராமுகமாகவே உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு சுமூகமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் இவ்வார்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மாத்தளை மாவட்டத்துக்கு உட்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
29 minute ago
31 minute ago
59 minute ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
59 minute ago
18 Sep 2025