Sudharshini / 2016 ஜூன் 21 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன்
கினிகத்தேனை ரம்பாதெனிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணமல் போன வர்த்தகர், செலுத்தி சென்றதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பவற்றை பொலிஸார் இன்று (21) மீட்டுள்ளனர்.
மர வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான ஜயந்த தெரகும்புர, கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) ஹட்டனுக்கு சென்று வருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அவர் திங்கட்கிழமை வரை வீட்டுக்கு வராததால் அவரது மனைவி கினிகத்தேனை பொலிஸில் திங்கட்கிழமை (21) முறைப்பாடு செயதுள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி, வட்டவளை டீ கார்டன் பகுதியில் வைத்து அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
எனினும், காணாமல் போனவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை எனவும், பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)
45 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago