Gavitha / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
தலவாக்கலை சென்கிளையார் ஸ்டேலிங் தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை (14) குளவிகொட்டுக்கு இலக்காகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கிளையார் ஸ்டேலிங் தோட்டத்தைச் சேர்ந்த முத்தையா ராஜரட்ணம் (வயது 58) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை அவரது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது, குளவிகொட்டுக்கு இலக்காகி சுயநினைவற்ற நிலையில், கொட்டக்கலை வைத்தியசாலைக்கு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், அவரது உடல் நிலை மோசமாக காணப்பட்டதையடுத்து கண்டி போதனா வைத்தியசாலை அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே அவர் செவ்வாய்க்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago