Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதியாக தெரிவான பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஹட்டனில், நேற்று (20) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து, தாங்கள் அனைவரும் உரையாடி வருவதாகவும் இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்துடன் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேயிலை தயாரிப்பை அதிகரித்தல், அதன் விலையை அதிகரித்தல் உள்ளிட்டவற்றின் மூலம், தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாக்குளைச் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு, கட்சிதாவும் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தேவையில்லை என்றும் யார் அதிகளவு பணம் தருகின்றார்களோ, அந்தப் பணத்தை, தங்களது வங்கிக்கணக்கில் வைத்துக்கொண்டு, பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் கைச்சாத்திடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு மக்களை மறந்து செயற்படும் அரசியல்வாதிகளை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அரசியல் தரகுத் தொழில், நிறுத்தப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago