2026 மே 02, சனிக்கிழமை

சடலத்தை அடையாளங்காண உதவுமாறு கோரிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 22 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

லிந்துலை, ஊவாக்கலை தோட்டத்தை அண்மித்த காட்டுப்பகுதியிலிருந்து, செவ்வாய்க்கிழமை (19) மீட்கப்பட்ட ஆணின் சடலம், இதுவரை அடையாளங் காணப்படவில்லை என்றும், சடலத்தை அடையாளங்காண உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி காட்டுப்பகுதியிலிருந்து, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமொன்று, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் லிந்துலை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தை அடையாளம் காண, பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .