Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஊரடங்குச்சட்டத்தை மீறும் வகையில், பொகவந்தலாவையில், மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை, பொகவந்தலாவ பொலிஸார், நேற்று(30) இரவு கைதுசெய்துள்ளனர்.
மேற்படி நபர், மிகவும் இரகசியமான முறையில், தனது வீட்டில் மதுபான விற்பனையில் ஈடுபவதாக, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, குறித்த நபரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார் மதுபான போத்தல்களுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது சுமார் 10 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago