Editorial / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சந்தேகநபர் ஒருவரைத் துரத்திச் சென்றபோது தவறுதலாகத் துப்பாக்கி வெடித்ததில் பலாங்கொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை, முகுனமலே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று (01) அதிகாலை 4.50 மணியளவில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும், பொலிஸ் சார்ஜன்ட் தயானந்த என்பவரும் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கிருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோட முயன்ற நிலையில், பொறுப்பதிகாரி அவரைத் துரத்திச் சென்றுள்ளார்.
சந்தேகநபரைத் துரத்திச் சென்றபோது அதிகாரி எதிர்பாராதவிதமாக நிலத்தில் தவறி விழுந்துள்ளார். இதன்போது அவரது இடுப்பில் இருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கி வெடித்ததில், அவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த அதிகாரி உடனடியாக பலாங்கொடை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago