2026 மே 09, சனிக்கிழமை

dd

சந்தனக் கட்டை திருட்டு: நீதிமன்ற முன்னாள் பதிவாளர் விளக்கமறியலில்

Editorial   / 2026 மே 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சந்தனக் மரக் கடத்தல் வழக்கிற்குச் சொந்தமான ஒரு தொகுதி சந்தனக் கட்டைகளைத் திருடிய குற்றச்சாட்டில், வெலிமடை நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் ஒருவரை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆர்.ஏ.சி.பி. அமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், தியத்தலாவை - கீழ் கதுருகமுவ, கிரிமடுவபத்தன, எல்லபெத்தேகல வீதியில் வசிக்கும் எரங்க சஜித் ரணசிங்க என்பவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக, கஹவத்தை - வெலிகதுர பகுதியில் வசிக்கும் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்த மொஹமட் கரீம் மொஹமட் ரம்ஷான் என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .