Editorial / 2019 ஜூலை 11 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வான் ஒன்றுக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டமை தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாவலப்பிட்டிய ரம்புக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஆர்.அசங்க பண்டார சமரதுங்க என்ற 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வான் சாரதியான குறித்த நபர் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் வானுக்குள் உறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட நேரமாகியும் உறக்கத்திலிருந்து எழும்பாததால் சந்தேகம் ஏற்படவே அம்பியுலன்ஸ் சேவைக்கு அவருடைய தந்தை அழைப்பினை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பியுலன்ஸ் வண்டி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வருகைதந்து பரிசோதனைகளை மேற்கொண்ட போது, குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
36 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago