2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சந்தியில் ஒளி இன்மையால் சங்கடப்படுவதாக கவலை

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி,  பத்தனை சந்தியிலுள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் வீதி மின்விளக்குகள் இன்மையால்,  மாலை மற்றும் இரவு வேளைகளில்

பஸ்ஸுக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை, ஹட்டன், நாவலப்பிட்டி ஆகிய பாதைகள் சந்திக்கும் பிரதான இடமே பத்தனை சந்தியாகும்.  இவ்விடத்தில் வீதி மின்விளக்கு பொருத்தப்;படவில்லை. இதனால் தினமும் பயணிகள்  பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். 

இச்சந்திக்கு அருகில் வீடுகளோ, கடைகளோ இன்மையால் பயணிகளின்; பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.  எனவே, பொதுமக்களின் நலன்கருதி இச்சந்தியில் வீதிமின் விளக்கு பொருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .