Kogilavani / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினராக அதுல ஹதகம, கேகாலையில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று(02), பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான துஷ்மந்த மித்ரபால, தாரக பாலசூரிய ஆகிய இருவரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்து தெரிவானதை தொடர்ந்து மாகாண சபையில் இரண்டு வெற்றிடங்கள் ஏற்பட்டன.
அதில் ஒருவரின் இடத்துக்கு அஜித் சாமிந்த நியமிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு இடத்துக்கு அதுல ஹதகம நியமிக்கப்பட்டுள்ளார்.
ரம்புக்கனை பிரதேச சபையின் தலைவரான இவர், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தேல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், மாகாண சபையின் உதவி செயலாளர் கபில பெரேரா, சபை செயலாளர் பாலித்த நாணயக்கார உட்பட பலர் கலந்துகொண்டனர்.


1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago