2026 மே 01, வெள்ளிக்கிழமை

சமனலகமவில் 50 பேர் வெளியேற்றம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், சமனலகம பகுதியில் சனிக்கிழமை (07) இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக  15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்க ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் ஏற்கனவே பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. சனிக்கிழமை (17) இரவு ஏற்பட்ட இந்த மணிசரிவில் ஒரு வீடு சேதமடைந்துள்ளது.

மழை தொடருமானால் மண்சரிவால் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் அப்பகுதியிலுள்ள மக்களை, பொலிஸார் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .