Janu / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர்களுக்கான விசேட கூட்டம் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார். அத்தோடு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்....
“பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கியதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் வர்த்தமானியில் இதற்கான அறிவித்தலை வழங்க வேண்டும். பெருந்தோட்டப் பகுதியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம் தற்போதைய நிலைமை, அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அது எந்த அளவுக்கு மக்களுக்கு சாத்தியமாக இருக்கின்றது.
பெருந்தோட்ட நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றது தற்போது சம்பளம் அதிகரிக்கப்பட்ட பின்னர் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது” என தெரிவித்ததுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான எதிர்கால வேலை திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போதும் விளக்கம் அளித்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ். பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், நகர வர்த்தகர்கள் கட்சியின் பிரதானிகள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செ.தி.பெருமாள்


1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago