Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ ஆரியபுர 319F கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்திக் கொடுப்பனவும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளும் பாராபட்சம் பார்த்து வழங்கப்படுவதாகத் தெரிவித்து, பிரதேசத்திலுள்ள மக்கள், கிராம உத்தியோகத்தரின் காரியாலயத்தை முற்றுகையிட்டனர்.
தாங்கள், ஒருவாரகாலமாக, கிராம உத்தியோகத்தரையும் சமுர்த்தி உத்தியோகத்தரயும் சந்தித்துச் செல்வதாகவும் எனினும் இந்தக் கொடுப்பனவுகள் அனைத்தும், கட்சி பார்த்து வழங்கப்படுவதாகவும் சில நாபர்களுக்கு, வீட்டுக்குத் தேடிச் சென்று கொடுப்பனவுகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து தொழில் இல்லாமல் வந்துள்ள தங்களுக்கு, இதுவரை 5000 ரூபாய் வழங்கப்படவில்லை என்றும் இதுபற்றிக் கேட்டால், தங்களுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுவதாகவும் கிராம உத்தியோகத்தரைச் சந்திக்கச் சென்றால், அங்கு தங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பாதிக்கப்பட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
27 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
5 hours ago