2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

சம்ரதாய பூர்வமாக பணிகள் ஆரம்பம்

Janu   / 2024 ஜனவரி 03 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்திருக்கு புதுவருடத்தையொட்டி  மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சம்ரதாய பூர்வமாக தமது பணிகளை புதன்கிழமை (03) ஆரம்பித்தனர்.

அந்தவகையில் மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை (03)  காலை தாம் தேயிலை கொழுந்து பரிக்கும் மரங்களுக்கு சம்ரதாய படி மஞ்சள் நீர் தெழித்து தேயிலை மரங்களுக்கு பூஜைகளை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து தோட்ட முகாமையாளர் உதவி முகாமையாளர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரை சம்ரதாயத்துடன் வரவேற்பு செய்து அவர்களை பொன்னாடை போற்றி கெளரவித்து அவர்களுக்கு நினைவு பரீசில்களையும் வழங்கி வைத்தனர்.

இதேவேளை தொழிலாளர்களுக்காக தோட்ட நிருவாகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ஓய்வு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.சதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X