Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவா ஸ்ரீதரராவ்
சர்வதேச மகளிர் தினத்தை, இலங்கையில் பொது விடுமுறையாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, சப்ரகமுவ மாகாண, பிரதான அமைச்சினால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வு, நேற்று (28), இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள, சப்ரகமுவ மாகாண சபையின், கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ரஷ்யா, கியூபா உட்பட பல பெரும்பாலான நாடுகளில், சர்வதேச பெண்கள் தினமானது, அரச விடுமுறையாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியதோடு, சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் திகதியை, இலங்கையிலும் பொது விடுமுறையாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்தும், சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு பெண்கள் பெரும் பங்காற்றி வருகின்றார்கள். எனவே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சர்வதேச பெண்கள் தினம் இலங்கையில் பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாகாண ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் லலித் தொடங்கொட்டுவ, மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சுணேத்ரா குணவர்தன, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் ஸ்ரீயாணி பந்மலதா உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago