R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை கெம்பியன் பகுதியினை நோக்கி பயணித்த வான் ஒன்று, கெம்பியன் நகரில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களை உடைத்து கொண்டு உட்புகுந்ததில், மூன்று சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று பகல் 12மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு சலூனும் அடங்குவதாகவும் முடி வெட்டுவதற்காக சலூனுக்கு வருகை தந்திருந்த 03, 06, 8.வயதுடைய சிறுவர்களே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் குறித்த மூன்று வர்த்தக நிலையங்களும் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளதோடு வானின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வானின் சாரதி மது போதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago