Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்மாதம் 1ஆம் திகதி, நாவலப்பிட்டி வைத்தியசாலையில், பெண் சிசுவொன்றைப் பிரசவித்துவிட்டு தலைமறைவாகியுள்ள பெண்ணைத் தேடி, பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
கடுமையான வயிறு வலி என்று கூறி, கடந்த 31ஆம் திகதி, நாவலப்பிட்டி வைத்தியசாலையில், பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் போது, அப்பெண் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், 1ஆம் திகதி, சத்திரசிகிச்சை மூலம், பெண் சிசுவொன்றை, குறித்த பெண் பிரசவித்துள்ளார்.
எனினும், பிறந்த சிசுவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததன் காரணத்தால், குறித்த சிசு, அவ்வைத்தியசாலையின் சிசு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கியில் கடன் பெறவுள்ளதாகக் கூறி, கடந்த 6ஆம் திகதி, வைத்தியசாலையை விட்டு வெளியேறிய பெண்ணை, இன்னும் காணவில்லை என்று, நாவலப்பிட்டி பொலிஸாருக்கு, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளத.
குறித்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது வழங்கிய விலாசத்தில், வாடகைக்கே இருந்து வருவது, முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் எனவே, காணாமல் போன பெண்ணைத் தேடும் பணியை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago