Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
R.Tharaniya / 2025 மே 11 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியாம் லங்கா தர்ம யாத்திரைத் திட்டத்தைச் சேர்ந்த துறவிகள் வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு நுவரெலியாவிற்கு பாதயாத்திரையாக வருகை தந்தனர்.
2025 ஆம் ஆண்டு இலங்கையில் அரச வெசாக் விழாவுடன் இணைந்து நடத்தப்படும்.“சியாம் லங்கா தர்ம யாத்திரை நிகழ்ச்சி“க்கு துறவிகள் நுவரெலியாவிற்கு பாதயாத்திரையாக வருகை தந்தனர்.
இவ் நிகழ்வு சனிக்கிழமை (10) காலை நடைபெற்றது. பண்டாரவளை நகரத்திலிருந்து நுவரெலியா வரை மே 7 ஆம் திகதி தொடங்கிய இந்த தர்ம யாத்திரையின் பாத யாத்திரையின் முதல் நாள் பயணம் பண்டாரவளையில் இருந்து தாவோவின்ன வரை இருக்கும்.
இரண்டாவது நாள் தாவோவின்னவிலிருந்து திவுருன்வெல வரை, மூன்றாவது நாள் திவுருன்வெலவிலிருந்து ஹக்கல வரை, நான்காவது நாள் ஹக்கலவிலிருந்து நுவரெலியா வரை.
சாலையின் இருபுறமும் கூடியிருந்த பௌத்த மக்கள், இந்த யாத்திரையில் ஈடுபட்ட துறவிகளுக்கு சாலையில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். நுவரெலியாவிற்கு வருகை தந்த சியாம் லங்கா தர்ம யாத்திரை நிகழ்ச்சியின் பிக்குகளை காமினி தேசிய பாடசாலைக்கு அருகில் மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் வரவேற்றார்.
அகில இலங்கை சாசன ரக்ஷக பட்டாலியனின் கௌரவச் செயலாளரும், உலக இளைஞர் பௌத்த சங்கப் பேரவையின் நிறுவனருமான வணக்கத்திற்குரிய முகுணுவெல அனுருத்த நாயக்க தேரர் தலைமையில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த யாத்திரைக்கு வந்திருந்த மகா சங்கத்தினர் உட்பட 500 துறவிகளுக்கு பம்பர கல்லில் உள்ள ஸ்ரீ மகா விஹாரையில் பிற்பகல் அன்னதான விழா நடைபெற்றது.
பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago