Editorial / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, எம்.கிருஷ்ணா
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவு, பாகெட் தோட்டத்தின் பாகெபல் பிரிவுலுள்ள நீரோடைக்கு அருகிலிருந்து 7 அடி நீளமான சிறுத்தையின் உடலத்தை, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள், நேற்று(2) மாலை மீட்டுள்ளனர்.
நன்கு வளர்ச்சியடைந்த எட்டு வயதான சிறுத்தையின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் உடலைக் கண்டு, தோட்ட மக்கள், தோட்ட முகாமையாளருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அவர் அதுத் தொடர்பில், நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் ஸ்தலத்துக்கு விரைந்து, சிறுத்தையின் உடலை மீட்டுள்ளனர்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக விரிக்கப்பட்டிருந்த வளையில் சிக்குண்ட சிறுத்தை, கழுத்து பகுதி இருகிய நிலையில் வளையைப் பியத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளதுடன், அருகிலிருந்த கிணற்றில் விழுந்துள்ளதாக, தெரியவருகிறது.
உடற்கூற்று பரிசோதனைக்காக, மினிப்பே விலங்கு வைத்தியசாலைக்கு, சிறுத்தையின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இதுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago