2026 மே 02, சனிக்கிழமை

சிறுத்தையின் உடல் மீட்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவை, ஜேப்பல்டன் டி.பி.தோட்டத்தில், முன்று அடி நீளமுடைய சிறுத்தையின் உடலை, பொகவந்தலாவை பொலிஸார், இன்று (02) மீட்டுள்ளனர்.

தேயிலை மலைக்குள் இருந்த சிறுத்தையுடன், வளர்ப்பு நாயொன்று சண்டையிட்டுள்ளதெனவும், இதன்போது, மலையடிவாரத்திலிருந்து கீழே விழுந்து, சிறுத்தை உயிரிழந்துள்ளதெனவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை, பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையிலேயே, உயிரிழந்துள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சிறுத்தையின் உடலை மீட்டுள்ளதுடன், நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவமொன்று, கடந்த மாதமும் இடம்பெற்றதெனத் தெரிவிக்கும் தோட்ட மக்கள், தேயிலை மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் சிறுத்தைகளால், தாம் பாரிய உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .