2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சிறுத்தையைக் கொன்ற இருவர் கைது; மேலும் இருவருக்கு வலைவீச்சு

Kogilavani   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை ரஜ்ஜம்மான மின்நிலையத்தின நீர்த்தேக்கத்துக்கு அருகில், சிறுத்தையொன்றைக் கொன்று வீசிய இருவரை, மாத்தளை வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து சிறுத்தையின் ஐந்து பற்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி நீர்த்தேக்கத்துக்கு அருகிலிருந்து, கடந்த 1ஆம் திகதி சிறுத்தையின் உடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிறுத்தையை கொலைசெய்து அதன் உடற்பாகங்களை பிய்த்த எடுத்துக்கொண்டதன் பின்னர், சந்தேகர நபர்கள் அதனது உடலை நீர்த்தேக்கத்தில் வீசி எறிந்துச் சென்றுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கியத் தகவலுக்கு அமைய சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், மாத்தளை பொப்பல்கல பிரதேசத்தில் வைத்து சிறுத்தையின் பற்களுடன் இருவரை கைதுசெய்துள்ளனர்.

சிறுத்தையின் கொலையுடன் மேலும் இருவருக்கு தொடர்பிருப்பதாகவும் எனவே, அவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X