Freelancer / 2024 ஜூன் 19 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதித்துள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தனது வீட்டில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்று நடத்தி வருவதாகவும் சிறுமி வர்த்தக நிலையத்திற்கு வந்த போது அவரை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த சிறுமியின் நிலை நீண்ட நாட்களாக பெற்றோர்களுக்குத் தெரியாது இருந்ததாகவும் கடந்த (17) ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனையடுத்து மாணவி கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கைது சந்தேக நபரை இன்று (19) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. R
57 minute ago
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
4 hours ago