Janu / 2025 மே 25 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோழிகளுக்கு தீவனம் வாங்க நமுனுகுல பிரதேசத்தில் இருந்து பசறை நகரத்திற்குச் சென்ற 13 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மகள் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பசறை, மீரியபெத்த, ராக்கமலை பகுதியில் இருந்து சிறுமியை கண்டுபிடித்துள்ளனர். .
கடந்த 21ஆம் திகதி அன்று தான் பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், கோழி தீவனம் வாங்க பசறை நகரத்திற்கு சென்ற நிலையில் தன்னை அழைத்துச் சென்ற காதலன் ஆளில்லாத தோட்ட குடியிருப்பொன்றுக்கு அழைத்துச் சென்று தன்னுடன் பலமுறை உடலுறவு கொண்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான ராக்கமாலே பகுதியை சேர்ந்த வயர் ஷோட் என்கிற ரால்கானை சனிக்கிழமை (24) அன்று பசறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago