2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் புகார்

Editorial   / 2020 மே 03 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் 1,000 ரூபாய் பெறுமதியான பசளைப் பொதிகள், பலாங்கொடைப் பிரதேச சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு, 1,500 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால், குறித்த பிரதேசத்துக்குட்பட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

வழமையாக மேற்படி சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களிடமிருந்து தேயிலைக் கொழுந்தை எடுத்துச் செல்லும் வாகனங்களே, பசளைகளையும் விநியோகித்து வந்ததாகவும்  நகரிலுள்ள வியாபார நிலையங்களில், பசளை பொதியொன்றின் விலை, 1,600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமையால், தங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 1,000 ரூபாய் பொதியும், 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் பசளை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா அல்லது வாகனங்கள் 500 ரூபாயை அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனவா என்பது தொடர்பில் தங்களால் ஊகிக்க முடியவில்ல என்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சிறு தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .