Freelancer / 2023 மார்ச் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரியவங்ச
பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
22 வயதான இந்த கைதிக்கு கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 25,000 ரூபாய் அபராதம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் திடீரென சுகயீனமடைந்த அவர், சிறைச்சாலையின் மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதே இனந்தெரியாத நபர், இந்தக் குற்றத்தை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த கைதியை வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
6 minute ago
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
2 hours ago
2 hours ago