2026 மே 02, சனிக்கிழமை

சிவனொளிபாதமலைக்கு வந்தவர்களில் 12 பேர் கைது

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.ஹேவா  

பல வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு வருகைதந்த நபர்களில் 12 பேர், ஹட்டன் ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் தியகல பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கையின் போதே, கஞ்சா மற்றும் மதனமோதகம் ஆகியவற்றை எடுத்துவந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 9 பேர் கஞ்சாவையும் ஏனையோர் மதன மோதகத்தையும் வைத்திருந்திருந்துள்ளனர்.  

இவர்கள், கொழும்பு, புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில், வருகைதந்தவர்கள் எனத் தெரிவித்த அந்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .