2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சிவனொளிபாதமலை நோக்கிய ஊர்வலங்கள் கல்பொத்தாவல விகாரையில் இருந்து ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பெல்மதுளை கல்பொத்தாவல விகாரையில் இருந்து, சிவனொளிபாதமலை நோக்கிய ஊர்வலங்கள், இன்று (10), ஆரம்பிக்கப்பட்டன.

பெல்மதுளை, கல்பொத்தாவ ஆலயத்தில் இருந்து, புத்தரின் சிலை தாங்கிய ஊர்வலம், 4 வழிகளில், சிவனொளிபாதமலையை நோக்கி செல்ல ஆரம்பித்தன.

இதற்கிணங்க, ஏற்கெனவே ஊர்வலங்கள் நடைபெற்ற இரத்தினபுரி, அவிசாவளை - ஹற்றன் வீதி, பெல்மதுளை - பலாங்கொடை வீதி, இரத்தினபுரி - பலாபத்வெல வீதி ஆகியவற்றுக்கு மேலதிகமாக, இம்முறை இரத்தினபுரி குருவிட்ட- எரத்ன வீதி வழியாகவும், புதிதாக ஊர்வலம் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே? பக்தர்கள் தமிழ் பூஜைகள் நிகழ்ச்சிகளை வீதியோரங்களில் நின்று மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .