2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சிவனொளிபாத மலைக்கு வந்த இருவர் உயிரிழப்பு

Freelancer   / 2023 மார்ச் 12 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் 

சிவனொளிபாத மலைக்கு வந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, மக்கோன பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு வந்த 67 வயதுடைய என்.ஜ.டி.சஞ்சான் என்பவர் கடும் சுகவீனம் காரணமாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொலிஸாரின் உதவியுடன் மஸ்கெலியா பிரதேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது சடலம் நேற்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதேவேளை, நேற்று காலை மல்வத்துகம பகுதியில் இருந்து வந்த ஆர்.எம்.சிரிவர்தன (வயது 58) என்பவரும் கடும் சுகவீனம் காரணமாக மலையில் இருந்து அவரது உறவினர்கள் மூலம் நல்லதண்ணி நகருக்கு தூக்கி வரப்பட்ட நிலையில் 1990 அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மஸ்கெலியா வைத்திய சாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X