எஸ்.சதிஸ் / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூண்டுலோயா சீன் தோட்டத்தில், தலா 7 பேர்ச் காணியில், பசும் பொன் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 35 தனி வீடுகளை, பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (10) இடம்பெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்திய அமைச்சின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமார், மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தத் தனிவீட்டுத்திட்டத்தினூடாக, குடிநீர்வசதி, மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


29 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago