Kogilavani / 2021 மே 16 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
கேகாலை மாவட்டத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, 695 குடும்பங்களைச் சேர்ந்த 2444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, கேகாலை மாவட்டச் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்துக்கு உட்பட்ட தொலங்கமு, கஸ்தவா ஆகிய பகுதிகளில், இரு வீடுகளின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர் என்றும் அனர்த்த நிலைமைகளால் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
201 வீடுகள் பகுதியளவிலும் 483 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அனர்த்தங்களின் பலியான இருவரின குடும்பங்களுக்கும் தலா 250,000 ரூபாயும் மரண செலவுகளுக்காக 25,000 ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
9 minute ago
29 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
29 minute ago
48 minute ago
2 hours ago