2026 ஜனவரி 21, புதன்கிழமை

சீரற்ற வானிலையால் மத்திய மாகாணத்தில் 400 பேர் பாதிப்பு

Kogilavani   / 2021 மே 26 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக  கண்டி மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேரும் நுவரெலிய மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலக பிரிவுகளில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 276 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர“ என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலிய பிரதேச செயலகப் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேரும், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 197 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில்

கங்கவட கோரளய பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 08 பேரும் பூஜாப்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்,
யட்டினுவர பிரதேச செயலகப் பிரிவில்  நான்குக் குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் தெல்தொட்டைப்  பிரதேச செயலக பிரிவில்  நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும்
உடுநுவர பிரதேச  செயலகப் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும்,  ஹரிஸ்பத்துவ  பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், மினிப்பே  பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரரும்,  பாத்தஹேவாஹெட  பிரதேச செயலகப் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், பஸ்பாகே கோரளய பிரதேச செயலகப் பிரிவில் 08   குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர்

கண்டி மாவட்டத்தில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர்   பாதிக்கப்பட்டுள்ளனர் என்று  அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்தில் 30 வீடுகளும் நுவரெலிய  மாவட்டத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளன என்று  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X