Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ, பி.கேதீஸ்
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அம்பகமுவ- பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 61 வயதுடைய பெண் ஒருவரும் 05 வயதுடைய முன்பள்ளிச் சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீதிகளில் விழுந்தமையால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.
ஹட்டன் -கொழும்பு வீதியில் கினிகத்தேன தியகல பகுதியிலும் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் வட்டவளை பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
கொட்டகலை- கொமர்ஷல் பகுதியிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்தமை காரணமாக, சுமார் 50 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் குறித்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் பொகவந்தலாவை பிரசேத்தில் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையால், பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கினிகத்தேனை – பிட்டவல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்தமையால், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அத்துடன், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் தொடக்கம் கித்துல்கல வரையான பல பகுதிகளில் மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .