2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சீருடையில் விளையாட்டுக் காட்டியவருக்குப் பிணை

R.Maheshwary   / 2022 ஜூலை 03 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.யோகா

கடற்படை சீருடையைப்  பயன்படுத்தி, 45 லீற்றர் பெட்ரோலைப் பெற்றுகொண்ட முன்னால் கடற்படை வீரர் ஒருவரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பெரேரா ஒரு இலட்சம் ரூபாய் சரிரப்பிணையில் பிணையில் விடுவித்துள்ளார்.

 கம்பளை -அங்கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சில தினங்களுக்கு முன்னர் கம்பளை- கண்டி வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு கடற்படை சீருடையுடன் வந்து, கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்றுக்கு தேவையென கூறி கேன் ஒன்றில் 45 லீற்றர் பெட்ரோலைப் பெற்றுகொண்டுள்ளதாக தெரிய வருகிறது 

சந்தேகநபர், கடற்படை ஒழுக்க விதிமுறைகளை மீறி,   தன் சொந்த தேவைக்காக சீருடையுடன்   எரிபொருள் பெற்றுகொண்டமைத் தொடர்பாக தலாத்து ஓயா கடற்படை முகாம் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, அவர் கம்பளை பொலிஸாருக்கு, தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்தே, சந்தேகநபரை  பொலிஸார்  கைது செய்து , கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பெரேரா முன்நிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X