Editorial / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா
ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் சுகாதார ஊழியர்களுக்கு, பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படாததன் காரணமாக, ஊழியர்கள் நேற்று (20) சில மணித்தியாலங்கள், தங்களது பணிகளை இடைநிறுத்தியுடன், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கும் தீர்மானித்தனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தாம் பணியாற்றி வருவதாகவும் ஆனால், தமக்கு வழங்க வேண்டிய கையுறைகள், முகக்கவசங்கள், காலணிகள் (பூட்ஸ்) என்பவற்றை வழங்காததால், தாம் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே பணியாற்ற வேண்டி ஏற்பட்டதாகவும் சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
எனவே மேற்படி பாதுகாப்பு கவசங்களை வழங்குமாறு வலியுறுத்தி, சுகாதார ஊழியர்கள், தங்களது பணியை நேற்று (20) காலை சில மணித்தியாலங்கள் இடைநிறுத்தியதால், சுகாதார பணிகள் ஸ்தம்பித்தன.
இதனைக் கருத்திற்கொண்டு, சுகாதார ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து, சுகாதார பணியாளர்கள், தங்களது பணிகளை மேற்கொள்ள தொடங்கினர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago