2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

சுப்ரமணியத்துக்கு எமனான பழைய சிவசுப்ரமணியம்

Janu   / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரெய்க் தோட்ட மேற்பிரிவில்   அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியம்  கோவிலில் பழைய கொங்கிறீட் பகுதியை அகற்றி கொண்டிருந்தவரின் தலையில் கொங்கிறீட் விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ  இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பண்டாரவளை, கிரெய்க் தோட்ட மேல் பிரிவைச் சேர்ந்த டி. சுப்பிரமணியம் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த கோவிலின் பழைய பகுதிகளை அகற்றும் போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X